தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவர் தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர் வடகரை சார்ந்த இருவருடைய ஆடுகள் பண்ணைகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 12 2024 மற்றும் 14 12 2024 ஆகிய காலங்களில் பெய்து வந்த கனமழையின் காரணமாக ஆட்டுப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் 90 ஆடுகள் நெஞ்சை உருக்கும் விதமாக உயிர் பலி ஏற்பட்டதை அடுத்து தகவலின் பெயரில், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் , தமிழ் மணி, மன்ற உறுப்பினர்
புணமாலை, ஆகியோரின் துரித நடவடிக்கையின் பேரில், ஆய்க்குடி பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு ஆட்டு உடல்கள் அனைத்தும் தண்ணீரிலிருந்து கால்நடை உதவி இயக்குனர் மகேஸ்வரி, கால்நடை ஆய்வாளர் சாமிநாதன், கால்நடை மருத்துவர்கள், ராதாகிருஷ்ணன், சசிகுமார், சிவக்குமார், கடையநல்லூர் துணை வட்டாட்சியர் சுடலை ஆண்டி, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, சுகாதார மேற்பார்வையாளர் தர்மர் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் ஆட்டு உடல்கள் அனைத்தும் உடற்கூறு ஆய்வுக்குபின்குழி தோண்டி மூடப்பட்டது