
31.01.2025 ம் தேதியன்று திண்டுக்கல் – நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே யானைத்தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, திருச்சி வனக்காவல் நிலையப்பணியாளர்கள், திண்டுக்கல் வனப்பாதுகாப்புப்படை மற்றும் சிறுமலை வனச்சரகப்பணியாளர்கள் இணைந்து திண்டுக்கல் நத்தம் சாலையில் தணிக்கை செய்தபோது ரெட்டியப்பட்டி பிரிவு அருகே யானைத்தந்தத்தை விற்க முயன்ற
- பெருமாள் சு.வ. 34/2025 த/பெ. கண்ணையன் சிறுமலை பழையூர், திண்டுக்கல்
- ஜெயக்குமார் சு,வ 45 த/பெ. பாலகிருஷ்ணன் சிறுமலை பழையூர்,திண்டுக்கல்
- பிரபு . சு.வ. 33/2025 த/பெ சுப்பிரமணி, சிலுவத்தூர் சாணார்பட்டி , திண்டுக்கல்
- சேகர் சு.வ. 55/2025 த/பெ.தங்கராசு வடக்குத்தெரு, நத்தம், திண்டுக்கல்
5.ஜோஷி சு.வ. 51/2025 த/பெ.ஜான் , ஆண்டிக்கோவில்பட்டி மேலூர், மதுரை - ரெங்கராஜ் சு.வ. 51/2025 த/பெ.ராஜ் அண்ணாநகர், கோபால்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்
7.வெங்கடேஷ் சு.வ. 46/2025 த/பெ.கோபால் சிறுமலை பழையூர், திண்டுக்கல் மாவட்டம்.
ஆகிய 7 நபர்களை கையும் களவுமாக பிடித்து மேல்நடவடிக்கைக்காக சிறுமலை வனச்சரக அலுவலகத்தில் ஒப்புடைத்து பின்னர் கன்னிவாடி/ சிறுமலை மற்றும் வன பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டு தணிக்கை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டதில், திண்டுக்கல் மேற்கு வட்டம், பன்றிமலை கிராமம், சோலைக்காட்டிற்கு அருகில் உள்ள செங்கடம்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பலா பிஞ்சுகள் சேகரம் செய்ய சென்றபோது யானைத் தந்தம் கிடைத்ததாக தெரிவித்ததன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று தீவிர புலன் விசாரணை மேற்கொண்டதில் யானைகள் சண்டையிட்டதில் தந்தம் உடைந்து முறிந்து கீழே விழுந்து கிடந்ததை பெருமாள் என்பவர் எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து குற்றம் உறுதி செய்யப்பட்டு, கன்னிவாடி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு எண்.05/2025 பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் 7 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்