
லஞ்சம், கமிஷன் பணத்தால் செல்வ செழிப்பில் உள்ள டாஸ்மாக் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்ல பொதுமக்கள் தயக்கம்.
டாஸ்மாக் மொத்த சரக்குகளை, கமிஷன் அடிப்படையில் டாஸ்மாக் இல்லாத கிராமங்களில் டாஸ்மாக் பார் முதலாளிகள் தலைமையில் டாஸ்மார்க் ஊதியர்களின் துணையோடு டாஸ்மாக் பார் கிளைகள் போன்று சுதந்திரமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த போலி விற்பனை இடங்களில், போலி மாதுபான சரக்குகள் அதிகம் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது
. இதனால் சாராய சாவுகள் எந்நேரமும் வர வாய்ப்புகள் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனே சுதாரித்து, பொதுமக்களை காக்க வேண்டும்.
சம்மந்தபட்ட துறையினர் அனைவரிடமும் சொல்லி பார்த்தும் யாரும் நடவடிக்கை எடுக்காததால் கொடைக்கானல் பெருமாள்மலை மலை கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த கடையை அப்பகுதி பெண்கள் ஒன்று சேர்ந்து உடைத்து டாஸ்மாக் மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர் .
கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதை காவல்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் துணையின்றி நடக்க வாய்ப்புகளே இல்லை என்பதால் கிராம பொதுமக்களே தங்களது பகுதி மது பிரியர்களின் உயிர்களை பாதுகாக்க துணிந்து விட்டனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.