ஒரு உயர் அதிகாரிக்கே பாதுகாப்பில்லாத நிலை, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தவறியதேன்.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமாரை கடந்த வாரம் கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்படுவதை எதிர்கொண்டுள்ள சீகூர் யானை வழித்தடத்திற்குள் சட்டவிரோத ரிசார்ட்டுகள் விழுவதை எதிர்த்துப் பணியாற்றியதற்காக அறியப்பட்ட அருண்குமார், புதன்கிழமை அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் மற்றும் அவரால் திரட்டப்பட்ட ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டார் அருண்குமார். மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வன அதிகாரி அலுவலகம் லாக் செய்யப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன.
வனவிலங்கு பாதுகாப்பு கருதி திட்டப்பணிகளை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனக்கூறி 400 பேர் முதுமலை புலிகள் காப்பக டிடி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து சிங்கார வனச்சரகர் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலகிரி காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பத்திரிகையாளர்கள் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கிண்டி சிறுவர் பூங்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி, அதிமுக எம்எல்ஏ தேவையில்லாமல் அரசியல் செய்து வருகிறார் என்று செய்தியாளர் இடம் கூறினார்.
. செம்மநத்தம் பழங்குடியினர் குக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இருப்புப் பகுதியிலிருந்து தண்ணீரைத் திருப்பிவிடவும் எம்எல்ஏ கோரியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்புப் பகுதிக்குள் தண்ணீரைத் திருப்பி, பைப்லைன் அமைக்க, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய வேண்டும். வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் வனத்துறை ஏற்பாடு செய்யும் தண்ணீரை ரிசார்ட் உரிமையாளர்கள் வனநில ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து தண்ணீரை வனவிலங்குகளுக்கு செல்ல விடாமல் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.
மேலும், பயனாளிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகள் தீர்க்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வருவாய் நிலத்தில் இருப்பதால் மக்கள் யாரும் அதைக் கொண்டிருக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வனத்துறை அதிகாரிகளுக்கு யானை வழித்தடத்தில் அமைந்துள்ள ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வ புகாரில் கூறப்பட்டுள்ளது. கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் கடந்த கால வரலாற்று படி வனவிலங்குகள் மற்றும் வனத்திற்கு எதிராக செயல்படுபவர், யானை வழித்தடம் மற்றும் வனநில ஆக்கிரமிப்பாளர்களுக்கு சட்டவிரோதமாக உதவி வருகிறார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் அந்த அளவிற்கு அக்கறை எடுத்தார். ஏனெனில் அவரது ஊரில் அந்த அளவிற்கு பசுமையாக இருக்காது.. எனவே இங்கு இருக்கிற பசுமையை காப்பாற்ற , வனவிலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திற்காக அவரை தமிழ்நாடு மக்களாகிய நாம் மிகவும் பாராட்ட வேண்டும்.
மலை மாவட்டமான நீலகிரியில் வாழும் பழங்குடி இன மக்கள், படுகர்கள், தோட்டத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தில் இயற்கையைச் சூறையாடும் வகையில் நடைபெற்றுவந்த பல நடவடிக்கைகளைத் அருண்குமார் தடுத்தார்.
நேர்மையான அரசு நிர்வாகம், நேர்மையான அரசு அதிகாரிகளை தட்டிக் கொடுப்பது என்று புதிய பாதையில் புரட்சி செய்து கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் விவகாரத்தில் சறுக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் இன்னும் சற்று விவேகத்துடன் தமிழ்நாடு அரசு நடக்க வேண்டும். இப்போதும் கூட காலம் கடந்து போய் விடவில்லை. தமிழகம் முழுவதும் யானகைள் வலசை போகும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் சிறப்பு அதிகாரியை நியமித்து அவர்களை முழுமையாக பயன்படுத்தலாம்.. காரணம், நேர்மையான அதிகாரிகளைத் தட்டிக் கொடுத்து ஆதரிக்கத் தவறினால் நல்லாட்சி தருவதும், தொடர்வதும் கடினமாகி விடும்.நீலகிரி யானைகள் வழித்தட விவகாரத்தில்தான் இவர் அதிகம் நெருக்கதலுக்குள்ளானார். நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வலசை போகும் பகுதிகளை ஆக்கிரமித்து ஏகப்பட்ட ரிசார்ட்டுகள் உள்ளன. அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்குச் சொந்தமான ரிசார்ட்டுகளும் இதில் அதிகம் உள்ளன. இவர்கள்தான் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் அவர்களை கடுமையாக தாக்குகின்றனர் .
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் அவர்கள் மேற்கொண்டு வந்த பணிகளை மனதில் கொணடு அவரை நீடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் யானைகளுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் வேலையைத்தான் அவர் செய்து வந்தார். யானைகள் வலசை போகும் பகுதியில் ரிசார்ட்டுகளைக் கட்டி வைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அதைத் தட்டிக் கேட்ட அருண்குமார் அவர்களை இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்வது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் விவகாரத்தில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா விலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஆனால் இவரது பணியிடமாற்றம் யானைகள் வழித்தடம் மீட்பு விஷயத்தில் பின்னடைவை ஏற்படுத்துமா, அல்லது வழக்கம்போல பணிகள் நடைபெறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் மக்களுக்கு தெரிந்து விடும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த ஒரு அதிகாரியை பணி இடமாற்றம் செய்வது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் நீலகிரி மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மக்களால் முன் வைக்கப்படுகிறது.