
தென்காசி மாவட்டம் ராமச்சந்திர பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது ஒரு ஏக்கர் பரப்புள்ள மாந்தோப்பில் 10′ நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.தகவல் கிடைத்தவுடன் தென்காசி தீயணைப்பு துறையினர் சிறப்பு நிலை அலுவலர் ஜெயரத்தினகுமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் (பொ)ஜெயபிரகாஷ் பாபு வீரர்கள் மாதவன் கார்த்தியன் ஆகியோர் மலைப்பாம்பினை லாவகமாக உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர் .