கோக்கு மாக்கு
Trending

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி.. பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு

இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது.

இந்த தீவு எங்குள்ளது?
அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.

இந்த தீவானது பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மறைந்திருக்கும். இந்த தனித்துவமான தீவானது குறைந்த அலைகளின் போது 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.

மேலும், இது இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு ஈர்க்க கூடிய இடமாக அமைந்துள்ளது.

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் சீகல் தீவு அமைந்துள்ளது. இதன் அற்புதமான அழகு மற்றும் தனித்தன்மை காரணமாக ‘மினி தாய்லாந்து’ என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது.

சீகல் தீவு தினமும் அரை மணி நேரம் மட்டுமே கடலில் இருந்து வெளிப்படுகிறது. இது இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடலின் அலை குறையும் போது, ​​ஒரு சிறிய அழகிய மணல் திட்டு தோன்றும். இதனை சீகல் தீவு என்று அழைக்கின்றனர்.

சீகல் என்பது கடலில் வாழும் ஒரு பறவை இனம் ஆகும். ஏராளமான சீகல்கள் மற்றும் பிற பறவை இனங்கள் கூட்டமாக வருவதால் இந்த தீவு பறவை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது.

சீகல் தீவை இன்னும் சிறப்புறச் செய்வது என்னவென்றால் அதன் அழகிய சுற்றுப்புறம். கடல் தொடர்ந்து அதன் மீது எழுவதால் குப்பைகள் எதுவும் இருக்காது. இங்கு வரும் பார்வையாளர்கள் மீன் பிடிக்கவும் செய்கின்றனர்.

இங்கு செல்லும் பயணிகள் சாலை அல்லது கொங்கன் இயில் வழியாக செல்லலலாம். மால்வானில் இருந்து, பார்வையாளர்கள் தேவ்பாக் கடற்கரைக்கு படகு சவாரி செய்ய வேண்டும்.

அங்கு உள்ளூர் மீனவர்கள் தீவிற்கு ரூ. 500-800 வரை கட்டணத்தில் சவாரி செய்கிறார்கள். இந்த தீவு, மும்பையிலிருந்து பயணிப்பவர்களுக்கு சுமார் 42.5 கிமீ தொலைவில் உள்ளது.

இதனை அருகிலுள்ள துறைமுகம் நவா ஷேவா ஆகும். அதேபோல அருகிலுள்ள விமான நிலையம் சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் விமான நிலையம் ஆகும்.

குறைந்த அலைகளின் போது மட்டுமே சீகல் தீவை பார்க்க முடியும் என்பதால் செல்வதற்கான சரியான நேரத்தை சரிபார்த்து விட்டு செல்ல வேண்டும். சரியான நேரம் தினமும் மாறுபடும் என்பதால் பார்வையாளர்கள் தீவிற்கு செல்லும் முன் திட்டமிட வேண்டும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button