
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகமான மதுரம் என்ற ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த சோட்டாக்குமார் (வயது 21) என்ற நபர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.