
இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சியின் 34 வார்டு கவுன்சிலர் தனபாலன் கூறிகையில் : திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் ரயில்வே தரைப்பாலம் தமிழக அரசால் புதிதாக கட்டப்பட்டது இந்த புதிய பாலத்தினை மக்கள் கடந்த எட்டு மாதங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மழை பெய்த பொழுது தரை பாலம் மூழ்கடிக்கப்பட்டு பேருந்து மற்றும் கார்கள் பழுதாகி நின்றது பல இருசக்கர வாகனங்கள் பழுதாகியது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் பாலத்தின் இரண்டு நுழைவாய்களையும் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு பாதுகாக்க அதிகாரியிடம் வலியுறுத்தினார் அன்றிலிருந்து நேற்று வரை எந்த போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது.

இன்று தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு பார்வையிட வருவதால் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் , பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போர்க்கால அடிப்படையில் கழிவுகளை அகற்றி வர்ணம் பூசும் பணியை நேற்று மட்டும் கண்துடைப்புக்கு செய்துள்ளனர்.

மேற்படி ரயில்வே தரை பாலத்தை இன்று பார்வையிட வரும் தமிழக சட்டமன்ற மதிப்பிட்டு குழு கரூர் ரயில்வே தரை பாலத்தினை ஆய்வு செய்து நிரந்தரமாக தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க முடியுமா என திண்டுக்கல் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும் ? அல்லது கரூர் ரோடு தரைப் பாலத்தை அருகில் உள்ள திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் போல் கரூர் ரோடு பாடத்தையும் மேம்பாலமாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர் ரோடு தரைப்பாலத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் இரண்டு மேற்பட்ட முக்கிய கல்லூரிகள் ,ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் தமிழக திராவிட மாடல் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .