
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட 21 சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட விலை மதிப்புள்ள சங்குகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் தலைமையில் வனவர் ரகு, வனக்காவலர் அபிஷேக், வனக்காப்பாளர்கள் முகமது பைசல் ராஜா உள்ளிட்டோர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆலந்தலை, சுனாமி காலனியை சேர்ந்த அந்தோணிராஜ் (51) என்பவர், தடை செய்யப்பட்ட 2 மாட்டுத்தலை சங்குகள், 18 குதிரை மொழி சங்குகள், 1 நட்டுவாகாலி சங்கு என மொத்தம் 21 சங்குகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் பறிமுதல் செய்து, சங்குகளை கைப்பற்றினர்.