
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்படியூத்து பகுதியில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துப்பாண்டி – மஞ்சுளா தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளதாகவும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சேம்படியூத்து பகுதியில் பெரியூர் திமுக வை சேர்ந்த கணேசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்த தனது தாய் மஞ்சுளா மீது மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அப்பொழுது கணேசன் எங்களுக்கு இழப்பீடு தருவதாக கூறினார் .
ஆனால் அவர் இழப்பீடு தரவில்லை எனது தந்தையார் முத்துப்பாண்டி தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து வந்தார் . இந்நிலையில் அவரும் கடந்த வருடம் இறந்துவிட்டார் தற்போது வரை அதிகாரிகளும் சரி திமுகவைச் சேர்ந்த கணேசனும் சரி இழப்பீடு தரவில்லை எங்களை வயதான எங்களது பாட்டி வளர்த்து வருகிறார் என்று கண்ணீர் மல்க கூறினார்.