
இந்தியாவிலுள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போரைக் கண்டறியும் முகாம் இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது.அதனடிப்படையில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில்,”பயணச்சீட்டோடு பயணிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில்
உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் சீதாராமன் வரவேற்றார்.
பாதுகாப்பான பயணம் பற்றியும் யூட்டிஎஸ் செயலிகளைப் பயன்படுத்துவது பற்றியும் நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.சங்க நிர்வாகிகள் அப்துல் சமது,
ஷேக் ஆஸாத்,
வீரப்பபுரம் கார்த்திக், கேடிசி ரசாக் ,
மற்றும் நூற்றுக்கணக்கான பயணிகள் கலந்து கொண்டனர்.
முடிவில்
கேடிசி ஷரீஃப் நன்றி கூறினார்.
*இந்த நிகழ்வு இந்தியாவிலுள்ள எந்த ரயில் நிலையத்திலும் நடைபெறாத இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியே!