
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் வீரா நதி ஆற்று பாலம் அருகில் செங்கோட்டை டு திருநெல்வேலி தண்டபாளத்தில் இன்று அதிகாலை ஈரோடு ரயில் சென்றது .
அந்த ரயிலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் மோதி இறந்துள்ளார் இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு கை கால் என உடல் சிதறி 200 மீட்டர் க்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது ‘
இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தென்காசி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டமாரி குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் சிதறி கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
இறந்தவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ன பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர் .