
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேடசந்தூர் எரியோடு பகுதி பொதுமக்கள் சார்பாக புகார் மனு கொடுத்தனர். இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, கோவிலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மண்ணை கெமிக்கல் ஊற்றி மணலாக மாற்றி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் இதனால் மணல் என்று வாங்கி கட்டிடம் கட்டும் வீட்டின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் அலசல் கெமிக்கல் கலந்த மண்ணை அள்ளுவதால் குளங்கள் 30 அடி முதல் 50 அடி வரை ஆழத்திற்கு கீழே சென்றுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. பலமுறை மாவட்ட கனிமவள அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேடசந்தூர், குஜிலியம்பாறை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவிடப்பட்டு உடனடியாக கனிமூன் அதிகாரியும் வட்டாட்சியரும் இணைந்து போலி மணல் தயாரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தன கண்துடைப்புக்காக ஒரு சில இயந்திரங்களை மட்டும் அகற்றிய அதிகாரிகள் தற்போது மாவட்ட முழுவதும் அலசல் மண் தயாரிக்கும் இயந்திரங்களை விரிவு படுத்துவிட்டன. இதனால் விவசாயமும் நிலத்தடி நீரும் அதே போல் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…
