
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள படையப்பா என்ற காட்டு யானையை கண்காணித்த வந்த வனத்துறை அதன் வழித்தடத்தை பின் தொடர்ந்த போது கொரண்டிகாடு பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த யானை சஃபாரி மையத்திற்குள் சென்று வளர்ப்பு யானைகளுடன் நின்று கொண்டிருந்தது.
படையப்பா யானையை பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர் இந்த யானைகள் சஃபாரி முகாமை கண்டுபிடித்தனர் .
இது குறித்து விசாரித்த வனத்துறையினர் அந்த முகாமின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டும் விசாரணைக்கு ஆஜராவதற்காகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.