
திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மணியக்காரன் பட்டியில் அருள்மிகு கருப்பணசாமி கோவில் மாசி திருவிழாவின் இறுதி நாளில்
கருப்பண்ணசாமி பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்வு தொடங்கியது
இதற்காக சுடச்சுட சோறு படைத்து குழம்பு வைத்து சூடான சாப்பாட்டை மஞ்சள் துணியில் கட்டிக்கொண்டு வில், அம்புடன் கருப்பணசாமி வேட்டைக்கு கிளம்பினார்.
சின்ன கருப்பு, பெரிய கருப்பு, அங்காள ஈஸ்வரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட 21 தெய்வங்கள் உடன் செல்ல மணியக்காரன் பட்டி கிராம மக்கள் பொதுமக்கள் அனைவரும் பாரி வேட்டைக்கு ஊர்வலமாக சென்றனர்
வீரப்பன் தெப்பத்தில் நிறைவடைந்த ஊர்வலத்திற்கு பின் சமைத்துக் கொண்டு வரப்பட்ட சாப்பாடு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.