கோக்கு மாக்கு
Trending

வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 8 நபர்கள் கைது – புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் பணியாற்ற பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிறுவன பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 – ந் தேதிகளில் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இதில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று கோவையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டிருந்தது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருந்தது.

அதிகாரிகள் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை தேர்வு எழுத வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியானாவை சேர்ந்த சுப்ராம்(26), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். க

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button