கோக்கு மாக்கு
Trending

1200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது – கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 சக்கர வாகனமும் பறிமுதல்

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (11.03.2025) ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் காவல் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஆனைமலை காவல் நிலைய காவல்துறையினர் அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மொய்தீன் உன்னி மகன் முகமது ஷபீல்(39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button