
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய தளமாகும் . இங்கு கோடைகாலங்களில் மலையை அவைதற்கான வழித்தடத்தை ஒரு வழி பாதையாக மாற்றும் அளவிற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இருக்கும் . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நோக்கில் சாலைகள் அமைக்கப்பட்டது.
183 ஆண்டுகளுக்கு முன்னர் கொடைக்கானல் மலைநகரை அடைவதற்கான நுழைவு கிராமமாக அமைந்த வெள்ள கெவி கிராமம். ஆனால் இன்றுவரை சாலைவசதி , மருத்துவம் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் அந்தக்கிராமத்திற்கு கிடைக்காத காரணத்தினால் உயிர்பலிகள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் மனைவி மேகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக டோலி கட்டி கும்பக்கரை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தூக்கிச் சென்று அங்கிருந்து பெரியகுளம் மருத்துவமனைக்கு 10 கிலோமீட்டர் கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது 35 வயது மதிக்கத்தக்க மேகலா உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல்வேறு வரி மற்றும் கட்டண வருவாய் இருந்தும் தமிகத்தின் முக்கிய சுற்றுலா தள கிராமம் இந்த நிலையில் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி ? உடனடியாக மத்திய மாநில அரசுகள் இது போன்ற மலை கிராமங்களுக்கு அவசரகால உதவிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்