கோக்கு மாக்கு
Trending

மருத்துவர்கள் எச்சரித்தும் தொடர்ந்த கட்சி பணிகள் : த.வெ.க திருநெல்வேலி மாவட்ட செயலாளர் திடீர் மரணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளருமான சஜி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது நண்பரை சந்திக்க நேற்று இரவு சென்றுள்ளார், நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது,. இதையடுத்து, அருவில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

10 நாட்களுக்கு முன்பாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, ரத்த சர்க்கரையின் அளவு 400க்கு மேல் இருந்துள்ளது. அப்போது, மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என்று சஜியை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், சஜி அலட்சியமாகஇருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

முன்னதாக, கடந்த 13 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சஜி கலந்து கொண்டார். அப்போது, சஜியுடன் தூத்துக்குடியில் த.வெ.க கட்சியின் வளர்ச்சி குறித்தும் விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button