கோக்கு மாக்கு
Trending

திருநெல்வேலி டவுண் காட்சிமண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை. தொழுகைக்குச் சென்று விட்டு திரும்பும் போது மர்ம கும்பல் வெறிச்செயல். இடத்தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றதாக தெரிகிறது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியுள்ளார் இந்த நிலையில் தற்போது இவர் திருநெல்வேலி டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தைக்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) செயல்பட்டு வந்துள்ளார். தைக்கா அருகில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரமலான் நோன்பை துவங்கிய ஜாகிர் உசேன் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தொழுகை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி உள்ளது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது அவ்வழியாக வந்தவர்கள் ஒருவர் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். திருநெல்வேலியில் டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணையை துவக்கினர் திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தார்.உடலை அங்கிருந்து எடுக்க ஜாகிர் உசேன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத் தகராறு காரணமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் நடந்திருக்காது என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்த நிலையில் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் தற்போது இறந்த ஜகீர் உசைன் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/share/v/1XKM7CWM2u

காட்சி மண்டபம் அருகே பிரதான சாலையில் 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலி மற்றும் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவர் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கு இடப்பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பரபரப்பாக இயங்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் அதிகாலையிலேயே நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் இடப்பிரச்சனையில் முன்னாள் காவல் அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஐஜி நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே உடலை வாங்குவோம் என கொலையானவரின் மகள் பேட்டி. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்

நெல்லை டவுனை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி என்பவரை இன்று காலை மர்ம நபர்கள் நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். டவுன் தைக்கா ஒன்றில் ஜாகிர் உசேன் அறங்காவலராக செயல்பட்ட நிலையில் தைக்கா அருகில் உள்ள இடம் தொடர்பாக தெளபிக் என்பவருடன் பிரச்னை இருந்துள்ளது. எனவே தெளபிக் தரப்பினர் தான் ஜாகிர் உசனை கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர் அதே சமயம் ஏற்கனவே ஜாகிர் உசேனுக்கு கொலை மிரட்டல் இருந்ததாகவும் அது தொடர்பாக டவுன் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டவுன் காவல் நிலையத்தை இன்று உறவினர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாமிமணி உயிரிழந்த ஜாகிர் உசேனின் மனைவி மகள் மற்றும் உறவின்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தென்மண்டல ஐஜி நேரில் வந்து விசாரணை நடத்தினால் மட்டுமே ஜாகிர் உசேன் உடலை வாங்குவோம் என அவரது மகள் மோசினா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எங்களிடம் எல்லா ஆதாரமும் இருந்தும் அப்பா மீது வன்கொடுமை வழக்கு போட்டனர். ஆனால் அப்பா மீது தவறு இல்லை என நிரூபித்து வழக்கில் இருந்து வெளியே வந்தார். எனவே வேறு என்ன செய்வது என தெரியாமல் கொலை செய்து விட்டனர். அப்பா பேசிய வீடியோவை ஏற்கனவே காவல்துறையிடம் காட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே ஐஜி இங்கு வர வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம். இதற்கு முன்னாடி இருந்த காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர் செந்தில்குமார் இருவரும் தான் எதிர் தரப்பிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். எனது தந்தையிடம் போலீஸ் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது எனவே அனைத்து ஆதாரம் இருந்தும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button