
பொதுவாக ஏரி குளங்களில் 30 கன மீட்டர் 5 லோடு லாரிகள்(200 கன அடி அளவு)வரை வண்டல் மண் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததை மீறி வடமதுரை அருகே பிலாத்து ஊராட்சி உப்பு குளத்தில் விதிகளை மீறி வண்டல் மண் மற்றும் கிரவல் மணல் கடத்தப்படுகிறது.
விவசாய நிலங்களுக்கு எடுக்கப்படுவதாக கூறி வரம்பை மீறி இடைத்தரகர்கள் லாபத்திற்காக வண்டல் மண் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் ஐந்து ஜேசிபிகள் 30க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
உடனடியாக வேடசந்தூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை