
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி நெடுஞ்சாலையில் இரவு பணகுடி காவல்துறையினரின் ரோந்து பணியின் போது சந்தேகிக்கப்படும்படியான நபரிடம் இருந்து மண்ணுளி பாம்பு ஒன்று கைப்பற்ற பட்டது.பிடிபட்ட பொருள் வன உயிரினம் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் -க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களின் உத்தரவு படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர் பாலச்சந்திரிகா,வனக்கப்பாளர்கள் பிரதீபா,வனஜா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன்,தனிஸ்,மாசானமுத்து ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று குற்றவாளியான சாமியார்மடம் பகுதியில் வசிக்கும் சிவகுமார் (33) யும் அவர் கடத்த முயன்ற மண்ணுளி பாம்பினையும் பணகுடி காவல் நிலையத்தில் இருந்து பெற்று குற்றவாளியினை நாகர்கோவில் வன வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.