
திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வெட்டுகத்தியால் வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து விற்பனைக்காக எடை போட்டு கவரில் கட்டி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி கறி வேட்டையாட பயன்படுத்திய வெட்டுக்கத்தி பறிமுதல்

நேற்று காலை திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் IFS அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செட்டியபட்டி, வேளாங்கண்ணிபுரத்தை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் ஆல்வின்எடிசன்(29) என்பவர் வெட்டுகத்தியால் காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனைக்காக வைத்திருப்பதனை கண்டுபிடித்தனர் . அந்த இடத்தில் முழு ஆய்வு நடத்தி 11 பாலித்தீன் கவர்களில் எடை போட்டு வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 1 வெட்டுக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . காட்டு பன்றிகறி மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வெட்டு கத்தியுடன் பிடிபட்ட ஆல்பின் எடிசனை அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் வெட்டுக்கத்தியால் தான் வேட்டையாடி கறியை விற்பனைக்காக கட்டி வைத்திருந்த போது பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேட்டையாடப்பட்ட காட்டு பன்றியின் மற்ற உடல்பாகங்களை மீட்க முடியாத காரணத்தினால் கிடைத்த குற்ற பொருட்களுடன் ஆல்வின் எடிசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து ரூ.2,50,000 அபராதம் விதித்தனர் என வனத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.