நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனவரதநல்லூர் தெருவை சேர்ந்தவர் ஷேக் செய்யது மகன் அப்துல் மாலிக் (வயது 18), கல்லூரி முதலாமாண்டு படிக்கும் இவர் நேற்று மாலை, அவரது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு தனது வீடு திரும்பியுள்ளார்.
சேரன்மகாதேவி யூனியன் அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரின் இருசக்கர வாகனமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில் சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு பைக்குகளும் மோதும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த விபத்து குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..