
நெல்லை மாவட்டம் அம்பை கல்லிடைக்குறிச்சி அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29),இவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் பணி செய்து வருகின்றார்.

இவர் தினமும் வேலைக்கு கல்லிடைக்குறிச்சியில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் சென்று வரும் நிலையில், இன்று வழக்கம் போல் செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரெயிலில், ஏறும்போது கால் தடுமாறி நடைமேடையில் விழுந்ததில் அவர் சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து கல்லிடை ரயில்வே நிலையத்தில் இருந்து பயணிகள் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் காயமடைந்த விக்னேஷை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..