
இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையில் ஒரு ரயில் பாதையை அமைக்க வேண்டும் இந்தியாவையும் இலங்கையையும் ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் யோசித்தது.
இந்தியாவையும்,
இலங்கையையும் இணைக்கும் வழிகளில் ரயில் பாதை மூலமாகவும் அதேசமயம் குறைவான செலவில் இணைக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து வந்தார்கள்.
இதற்கு முக்கிய காரணம்
இலங்கைத் தீவில் விளைந்த உயர்தர புகையிலை. அதை அங்கிருந்து கொண்டுசென்று ஐரோப்பாவில் சந்தைப்படுத்த வேண்டும் என்பது தான் பிரிட்டிஷ் அரசின் திட்டம்.
இதற்கான முயற்சிகளை
1870 – முதல் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.இதற்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது தான். போட்மெயில் விரைவுத் தொடர் வண்டி.
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பும் ரயில்
தூத்துக்குடி வரை வரும். அங்கு பயணிகளை அழைத்துச் செல்ல அங்கே கப்பல் தயாராக இருக்கும். இலங்கையை அடைந்தவுடன் மீண்டும் ஒரு டிரெயின் அந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு இலங்கைக்குள் பயணிக்கும்.
சென்னைமில் இருந்து 600 கிமீ தொலைவில் இருக்கும் தூத்துக்குடிக்கு வர 21 மணி நேரமும் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடல் வழியாக பல மணி நேரங்கள் செலவழித்து,
270 கிமீ தூரமும் பயணிக்க வேண்டும்.
இதனால் இதற்கு மாற்று ஏற்பாடு எதையாவது செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வந்தது.
தனுஷ்கோடிக்கும்-தலைமன்னார் இடையே கடல் வழியாக 22 கிமீ தொலைவு தான் இருக்கிறது.
எனவே இந்த இரண்டையும் ஆடம்ஸ் பிரிட்ஜ் எனும் ராமர் பாலம் மணல் திட்டுகள் வழியாக ரயில் பாதை அமைத்து இணைக்கலாம் என்றொரு திட்டத்தை 1896 களில் இலங்கை ரயில் நிறுவனத்தின் மூத்த பொறியாளராக இருந்த F.J.Waring என்பவர் கூறினார் . இதற்கு அன்றைய மதிப்பில் சுமார் 2.59 கோடி ரூபாய் செலவாகும் என்ற திட்ட மதிப்பீடையும் தந்தார்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் தீவை ரயில் பாதை மூலமாக இணைத்து அதை தனுஷ்கோடி வரை நீட்டித்து அங்கிருந்து இலங்கையின் தலைமன்னாரை கப்பல் மூலமாக இணைக்கலாம் என்ற திட்டம் போடப்பட்டது.
இதற்காக 1911 ல் பணிகள் துவங்ப்பட்டு 1914 -ல் பணிகள் முடிந்து பாம்பன் ரயில் பாலம் தொடங்கப்பட்டது.

1914 வரையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்து பின் அங்கிருந்து கப்பல் மூலமாக இலங்கை வரை சென்ற போட்மெயிலின் பயணம்
1914 -ல் சென்னையில் இருந்து இராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடிக்கு மாற்றப்பட்டது.

சென்னையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பாம்பன் கடல் பாலத்தைக் கடந்து தனுஷ்கோடிக்கு டிரெயின் வந்து சேரும்.
டிரெயின் வரும் முன்னரே இலங்கையில் இருந்து பெரிய ஸ்டீமர் கப்பல் தனுஷ்கோடி ரயில்நிலையத்தில் வந்து காத்து நிற்கும்.
பயணிகள் டிரெயினில் இருந்து இறங்கியதும் பயணிகளை அழைத்துக்கொண்டு அந்தப் படகு தலைமன்னாருக்குச் செல்லும்.
அங்கிருந்து மீண்டும் மற்றுமொரு டிரெயினில் இலங்கைக்குள் பயணிகள் பயணிப்பார்கள்.
பயணிகளுடன் சேர்ந்து வர்த்தகப் பொருட்களும் இந்த வழியில் மிக எளிதாக குறைந்த செலவில் வந்து சென்றது.

இப்படியாக 1964 வரையிலும் நடந்து கொண்டிருந்த போட்மெயில் ரயில் சேவை
அந்த வருடத்தில் வீசிய பெரும் புயலில் சிக்கி அப்படியே நின்று போனது.
ஒரு முழு டிரெயினையே அந்தப் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது.
அந்தப் புயலில் தனுஷ்கோடி மட்டும் அழியவில்லை இரு நாடுகளை இணைத்த அட்டகாசமான ஒரு டிரெயின் சேவையும் அதோடு நின்று போனது.
புயலால் உருக்குலைந்து போன தனுஷ்கோடி நகரின் ரயில் நிலையம்,
போட்மெயிலின் பசுமையான நினைவுகளை தன் சிதிலமடைந்த சுவர்களில் பொதிந்து வைத்து இன்றளவும் அமைதியாக நிற்கிறது.
தனுஷ்கோடி நகரமும்,
ரயில் நிலையமும்,
போட் மெயில் ரயில் சேவையும் நின்று போனாலும் இராமேஸ்வரம் வரையிலான ரயில் சேவை மட்டும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே தொடர்கிறது.
இந்தியாவையும்-
இலங்கையையும் இணைக்க வேண்டும் என 1914 ல் பிரிட்டிஷ் அரசு கடலில் கட்டிய பாலத்தின் வயது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதால்,
அந்தப் பாலத்தின் அருகில் இன்னொரு புதிய ரயில் பாதை பாலத்தை இந்திய ரயில்வே கட்டியிருக்கிறது.
அந்த புதிய ரயில் பாதையைத் தான் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.