தமிழகம் முழுவதும் கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து தடையின்றி நீர்,மோர் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர்,நுங்கு, இளநீர் உள்ளிட்டவைகள் தவெக கட்சியினரால் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கூடல் பேரூராட்சி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களுக்கு வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதன் காரணமாக நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு தவெக கட்சியின் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் முன்னிலையில் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தெற்கு மாவட்ட செயலாளர் கிரிப்சன் மற்றும் இசக்கி தலைமையிலான தவெகவினர் நீர், மோர்,நுங்கு, இளநீர்,தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினர்.
கடுமையாக வெயிலின் தாக்கம் காரணமாக ஆலங்குளம் அருகே முக்கூடல் பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலுக்கு சென்று நீர்,மோர்,நுங்கு, உள்ளிட்டவைகளை அருந்திவிட்டு, தர்பூசணி,இளநீர்,நுங்கு உள்ளிட்ட பழங்களையும் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது…..