நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாககுடியிருப்பு பகுதியில் வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி சுற்றித்திரியும் குரங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின் படி குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
மேலும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த குரங்குகளை வனப்பகுதிக்குள் விடுவித்த சம்பவத்தால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.