தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் முன்பு இருபுறங்களிலும் சாலையின் நடுவே ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி வரை செல்லக்கூடிய முக்கியமான பிரதான சாலையாகவும், தினந்தோறும் இந்த சாலையில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த சாலையின் நடுவே காணப்படும் குழிகளால் சாலையில் முதலியார்பட்டி பகுதியை கடந்து செல்லக்கூடிய கர்ப்பிணி பெண்கள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இந்த சாலை வழியாக தமிழகத்தில் இருந்து அதிக எடையுடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் அதிக அளவில் செல்வதால் சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளவும், குழிகளை சரி செய்து தர வேண்டி பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் வழங்கப்பட்டும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .
இதை பார்த்த அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றினைந்து குண்டும் குழியுமாக காணப்படும் சாலையில் பழைய ஓடுகள், செங்கற்கள், மற்றும் மண்ணை போட்டு குழியை நிரப்பி சீரமைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.