
5000 ரூபாய் லஞ்சம் தரவில்லை என்றால் உன் புடு….கை அருத்துபுபுடுவேன்…..
புதுக்கோட்டைக்கு மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட சிந்து என்கிற ஏழை பெண்ணின் கணவரிடம் 5000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் செவிலியர் அமுதா.

சுகப்பிரசவம் ஆன உடன் பணத்தை உடனே கொடு என்று வற்புறுத்தி கேவலமாக நடந்துள்ளார்.
இந்த செவிலியர் அமுதா தொடர்ந்து இதே வேலையில் ஈடுபட்டு வந்ததால் எற்கனவே தண்டனைகள் பெற்றுள்ளார் என்றும் இருந்தும் திருந்தாமல் தொடர்ந்து இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் அரசு மருத்துவமனைக்கு எப்போதும் சீருடை அணிந்து வருவதில்லை. ஏதாவது விளக்கம் கேட்டாலோ அல்லது இவர் லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்தாலோ ஆபாச வார்த்தை மழை பொழிவதாக கூறுகின்றனர் உள்ளூர் மக்கள் .
அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை எளியவர்களிடம் லஞ்சம் கேட்டு ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்யும் இந்த மாதிரி லஞ்சப்பேய்கள் மீதும் இதை அனுமதித்து அமைதி காத்த தலைமை மருத்துவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான், இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.