நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரவு நேரத்தில் கரடி சுற்றித்திரிந்தது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமடைந்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், அம்பை வனத்துறையினர் சார்பாக கல்லிடைக்குறிச்சியில் கரடி பிடிக்க கூண்டு வைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கரடி ஒன்று சிக்கியது.
இதனால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நிம்மதியடைந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் ஏற்கனவே அயன் சிங்கம்பட்டி பகுதியில் கரடி சுற்றித்திரிந்த இடத்தில் மீண்டும் சுற்றித்திரிந்தது.
இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..