
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் .
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடெங்கும் இறைச்சி மீன் கோழி கறிக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெரியகுளம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு முன்பாக மில்லர் ரோடு திரும்பும் இடத்தில், விநாயகர் கோயிலுக்கு பின்பாக தற்போது மீன் விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அரசின் விதிகளை எப்போதும் மதிக்காமல் காற்றில் பறக்க விடுவதே இவர்களுக்கு வாடிக்கையாக போனது . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இது ஒன்றே பெரியகுளம் நகராட்சியின் சுணக்கமான நிர்வாகத்திற்கு சான்றாக விளங்கும் .
மு மணிகண்டன்
மாவட்ட செய்தியாளர் தின பார்வை நாளிதழ்