
கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்தவர் மேரி ஜெமிதா. ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் வெளி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து தற்போது கடையம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிந்த போது பல்வேறு வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் ஒருதலை பட்சமாக செயல்பட்டும் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அப்போது அவரது உயர் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தப்ப வைக்கப்பட்டார்.
தற்போது காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று கடையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டது பெரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.