
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுGood Samaritan Actஎன்னும் தலைப்பில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று,

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தொடக்கவுரை ஆற்றினார்.செயலாளர் பேராசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார்.நிர்வாகி ஒளி மாலிக் அறிமுகவுரையாற்றினார்.பொருளாளர் சீதாராமன் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் தென்காசி காவல் துறை GRPF பிரிவின் SSIதிரு.நாடகக்கண்ணு அவர்களின் ஏற்பாட்டின் பேரில் துணை ஆய்வாளர் திரு.மாரியப்பன் அவர்கள் ரயில் பயணிகளிடையேசட்டத்தின் சாராம்சம் குறித்து பேசினார்.
விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி மருத்துமனைக்கு கொண்டு சேர்ப்பவர்தான் குட் சாமரிடன்!அப்படி விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் நபர்களை போலிசார் விசாரணை செய்ய மாட்டார்கள்.அவர்களைப் பாராட்டுவர்.
எந்த சட்டமும் அவர் மீது பாயாது என்று கூறினார்.கௌரவ நிர்வாகி டாக்டர் பத்மநாபன் நிர்வாகிகளான: வீரப்பபுரம் கார்த்திக் ஷேக் ஆஸாத் நாலாயிர முத்து தானிஷ் மஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(குறிப்பு: கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் ஏதாவது ஒரு தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது).
ரயில் பயணிகள் நலச்சங்கம் கல்லிடைக்குறிச்சி