
பொட்டல்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலி
பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (55) ஆட்டோ ஒட்டுநரான இவர் நேற்று பொட்டல்புதூரில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு ஆட்டோவில் சென்ற போது தனியார் பல்க் அருகே சாலையின் குறுக்கே பூனை சென்றபோது ஆட்டோ பிரேக் பிடித்த போது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.