
திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டி கிராம பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது
மது அருந்தியவர்கள் அடிக்கடி ஊருக்குள் தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. எனவே இந்தப் பகுதியில் மதுபானம் விற்கக் கூடாது என அப்பகுதி கிராமப் பெண்கள் பலமுறை வலியுறுத்தியும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மதுபானம் விற்பனை நடைபெறும் இடத்திற்கு திரண்டு சென்றனர்.
இதனை கண்ட மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இதனை அடுத்து ஆத்திரத்துடன் வந்த பெண்கள் கையில் கிடைத்த மது பாட்டில்களை எடுத்து தரையில் வீசி எரிந்து உடைக்க தொடங்கினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது