
தென்காசி மாவட்டம் கடையம் உடையார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயா, ஜோதி, பார்வதி, செல்வ பாக்கியம், மாரிச்செல்வம், முப்புடாதி, லட்சுமி ஆகியோர் கந்து வட்டி கொடுமையில் இருந்து தங்களைக் காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறோம்.
பீடி சுற்றி குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக சில பைனான்ஸில் பணம் வாங்கி சரியான முறையில் தவணை செலுத்தி வந்தோம்.
சில சூழ்நிலை காரணமாக சில வாரம் தவணை கட்ட முடியவில்லை இந்த நிலையில் நிலுவை தொகையை வசூல் செய்ய பைனான்ஸ் ஊழியர் வேறு ஒரு பைனான்ஸ் நபரை வரவழைத்து அவருக்கு சேர வேண்டிய தவணைத் தொகையை அவர்களும் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார் இப்படி பல பைனான்ஸ் ஊழியர்கள் சில கடன் பல கடனாக மாறியது எங்கள் வருமானம் குடும்பத்திற்கே போதுமானதாக இல்லாத நிலையில் பைனான்ஸ் ஊழியரிடம் தவணையை கட்ட கால அவகாசம் கேட்டோம்.
ஆனால் அதற்கு அந்தப் பைனான்ஸ் ஊழியர்கள் கொச்சை வார்த்தைகளால் பணத்தை கணக்கு முடி என்னுடைய பணத்தை தா என தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள் தட்டி கேட்ட பிள்ளைகளை அடிக்க செல்கிறார்கள் மற்றும் கொலை மிரட்டலும் விடுகிறார்கள்.

காவல்துறையில் புகார் கொடுப்போம் என்று சொன்னால் அங்கேயும் எங்களுக்கு ஆள் இருக்கிறது பணத்தை கொடுத்து சரி செய்து விடுவோம் எங்களை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.
வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டு பணத்தை தந்தால் தான் வீட்டை விட்டு செல்வேன் என்று வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் எங்கள் பைனான்ஸ் நிறுவனத்தை பகைத்துக் கொண்டு உங்கள் தெருவில் நடமாட முடியாது நடு ரோட்டில் வைத்து உங்களை அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள் இவர்கள் செய்யும் செயலால் எங்களுக்கு தற்கொலை செய்ய தூண்டுகிற செயலாக இருக்கிறது.
எனவே இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு மறுவாழ்வு தரும்படி கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.