
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையம் அருகே பெற்ற மகன்களாலேயே கைவிடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டி என்று நமது விசில் செய்தியில் வெளியிட்டிருந்தோம் இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி அதிரடியாக விசாரணை செய்து அந்த மூதாட்டியை மீட்டு அம்மூதாட்டியின் மூத்த மகனை அழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர், இந்த நற்செயலுக்கு காரணமான தென்காசி மாவட்ட கடையம் காவல்துறையின் தனி தனிப்பிரிவு காவலர் முத்துவேல் மற்றும் நவக்குமார் கடையம் காவல் துறையின் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகியோரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்..
*மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பார்வைக்கு… “இதில் முக்கியமான சம்பவம் என்ன வென்றால் மூதாட்டியின் ஒரு பேரன் காவல்துறையில் பணியில் உள்ளார் என்பதே….”*