
வன உயிரினமும் வன உயிரின பாதுகாப்பு பட்டியல் இரண்டில் உள்ள பச்சைக்கிளிகளை விற்பனை செய்து கொண்டிருந்த தாய் , மகன் கைது
திண்டுக்கல் கிழக்கு ரதவீதி தங்கம் லாட்ஜ் அருகே வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை இரண்டு பேர் விற்பனை செய்து கொண்டிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட வன பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட வனப்பாதுகாப்பு படையின் வனச்சரகர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறுமலை வனச்சரகர் மதிவாணன் ஆகியோரது தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது சாலை ஓரமாக அமர்ந்திருந்த தாராபுரத்தை சேர்ந்த கல்பனா மற்றும் அவரது மகன் பாண்டி ஆகியோர் வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான மூட்டையை சோதனை செய்த போது சிறிய கூண்டு அதற்குள் இருந்ததும் அதில் தடை செய்யப்பட்ட பச்சைக்கிளிகள் எட்டு எண்ணிக்கையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பச்சைகிளிகளை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரையும் பிடித்து சிறுமலை வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தனர்.
சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான வனச்சரக அதிகாரிகள் பிடிபட்ட இருவரிடமும் இதற்கு முன்பு இவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு உள்ளதா ? தற்போது விற்பனைக்கு கொண்டு வந்த பச்சை கிளிகள் எப்படி கிடைத்தது ? கிளிகளை பிடிக்க பயன்படுத்தப்பட்ட வலைகள் மற்றும் கருவிகள் எங்கு வைத்துள்ளனர் என்றும் கூட்டாளிகள் யாரும் உள்ளனரா என்றும் வேறு குற்ற பொருட்கள் இருந்தால் அவற்றையும் பறிமுதல் செய்யும் நோக்கில் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல்.