
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெயிலின் சூட்டை குறைக்க பொதுமக்கள் இளநீர், லெமன் சர்பத், லெமன் ஜூஸ், ஐஸ் மோர்,தர்பூசணி ஜூஸ் போன்ற பானங்களுக்காக கடைகடை நாடி செல்கின்றனர்.
சிலர் தங்கள் வீடுகளில் தயார் செய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம், கடையம்,பொட்டல்புதூர் பகுதிகளில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சியடைந்து 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகியது.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலினால் எலுமிச்சை பழத்தின் தேவைகள் அதிகரித்து ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை சதம் அடித்துள்ளதால் எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.