
இந்திய காஷ்மீர் மாகாணத்தில் நடந்திருக்கும் கொடிய தீவிரவாத தாக்குதல் எல்லா நாடுகளையும் அதிரவைத்திருகின்றது, தேசாபிமானிகள் மிகுந்த துயரமும் தாளா வருத்தமும் கொண்டு விதியினை நொந்தபடி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றனர்.

பஹல்காம் மாவட்டம் மிக மிக அழகான பிரதேசம், அதுவும் அந்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதி, நீண்ட பசுமையான புல்வெளிகளும் அழகான ஓடைகளும் நிரம்பியதால் ‘கிழக்கின் சுவிட்சர்லாந்து’ என கொண்டாபடும் எழில்மிகு பகுதி.
அங்கேதான் இந்த கொடிய செயலை மானுடம் அஞ்சும் படுகொலைகளை சதிகார கும்பல் அரங்கேற்றியிருகின்றது.
தேசத்தின் மிக மிக கொடிய தருணமிது, எவ்வளவோ தடை தாண்டி திரும்ப கொண்டுவந்த அமைதியினை மதவெறி கொடிய கும்பல் சிதைத்திருகின்றது, கொடூரமானவர்களின் கீழ்புத்தி சதி இம்முறை பலித்துவிட்டது.
இந்த தாக்குதலுக்கு தேசாபிமானிகள் கைகாட்டும் விஷயம் நிச்சயம் இது உளவுதுறை மற்றும் பாதுகாப்புதுறையின் சறுக்கல்
தவுகர் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கபடுகின்றான் என்றவுடனே பதிலுக்கு லஷ்கர் இயக்கம் கொடும் தாக்குதலை தொடுக்கும் என எதிர்பார்க்கபட்டது. இதே எதிர்பார்ப்பு பாதுகாப்பு அமைப்புகளிடமும் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் மீறி கணிப்புக்களை பொய்யாக்கி பாதகம் செய்துவிட்டது கொடிய ஓநாய் கும்பல்.
எல்லோரும் அஞ்சியது போலவே லஷ்கர் அமைப்பின் உள்ளூர் அமைப்பு இந்த பாதகத்தை செய்திருக்கின்றது.
இந்திய பாதுகாப்பு அமைப்புக்கள் கவனம் ராணுவத்தார் மேல் இந்திய அரச சொத்துக்கள் மேல்தான் இருக்கும் என அங்கேதான் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள், யாரும் எதிர்பாரா நேரம் சுற்றுபயணிகள் மேல் பாய்ந்திருக்கின்றார்கள்.
பொதுவாக பொதுமக்கள் மேல் 2001க்கு பின்பு தீவிரவாதிகள் தாக்கவில்லை, ராணுவ இலக்கையே குறிவைத்தார்கள் அதனால் எல்லோர் கவனமும் அங்கே இருக்க இங்கே பாய்ந்துவிட்டார்கள்.
அதுவும் இந்திய ராணுவசிப்பாய் சீருடையில் வந்து சந்தேகமின்றி நெருங்கி சுட்டிருக்கின்றார்கள் சதிகாரர்கள் இன்னும் நினைத்துபார்க்கமுடியா மதவெறியுடன் சுட்டிருக்கின்றார்கள். இஸ்லாமியர் அல்லாதவர் என கவனமாக சுட்டிருக்கின்றார்கள் கொடியவர்கள்
இங்கு கவனிக்கவேண்டிய அல்லது தேசாபிமானிகள் கொந்தளிக்க காரணம் பல உண்டு
முதலாவது நடக்கும் இஸ்ரேல் போரில் இந்தியாதான் முதலில் ஹமாஸ் செய்த அட்டகாசத்தை கண்டித்தது. ஹமாஸ் அப்பாவி இஸ்ரேலியர் ஆயிரம்பேரை கொன்று 250 பேரை சிறைபிடித்து போர் தொடங்கியபோது அதை முதலில் தீவிரவாத எதிர்ப்பாக கருதி இஸ்ரேலை ஆதரித்த நாடு இந்தியா.
அப்போதே பல இஸ்லாமிய ஜிகாதிகள் நாங்கள் காஷ்மீரிய இயக்கத்தோடு இணைவோம் என்றார்கள் அந்த எச்சரிக்கை இங்கு பெரிதாக கண்டுகொள்ளபடவில்லை.
தவுகர் ராணா ஒப்படைப்பு , வக்ப் வாரிய சட்டம் என பல விவகாரங்கள் எழுந்த நிலையில் அமெரிக்க துணை அதிபரின் வருகை காஷ்மீரில் பல முதலீடுகளை செய்யும் சவுதிக்கு பிரதமர் மோடி பயணம் என பல நிகழ்வுகளை கணக்கிட்டு நேற்றைய நாளை குறித்துவிட்டார்கள்.
இது முதலில் உளவுதுறையின் தோல்வி அதை ஒப்புகொள்ள வேண்டும்
இரண்டாவது பெரும் தோல்வி மேற்குவங்கத்தில் நடக்கும் கலவரங்கள் இதர வக்ப் வாரிய சர்ச்சைகளை இந்திய தேசிய அரசு அமைதியாக அணுகுவது இதுதான் அடுத்த கோணல்.
ஆரம்பத்திலே மிக கடுமையாக அடக்கினால் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கும்பல் அஞ்சியிருக்கும். ஆனால் இந்திய அரசின் அமைதியான போக்கு அவர்கள் தைரியமாக வந்து தாக்குதல் நடத்த வழி செய்துவிட்டது.