
உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மணல் லாரிகளில் மணல் கடத்தலுக்கு ஒரு நாளைக்கு மினிமம் ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., பேசிய ஆடியோ இன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் என்பவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டுள்ளார்.