
ந
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை என்ற கிராமத்தில் வி.கே.புதூரைச் சேர்ந்த ஆமோஸ் (வயது 26) என்பவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி சாத்தான்குளத்தை சேர்ந்த நந்தினி, இவரும் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த தம்பதிக்கு 2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஆமோஸ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தும் வரும் நிலையில், அங்கு கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ஆமோஸ் வீட்டிற்கு புல்லட்டில் வந்த மர்ம நபர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆமோஸ் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த சென்ற கடையம் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து எதற்காக கொலை செய்யப்பட்டார், யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஆமோசின் மனைவி நந்தினியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது..