
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் இன்பராஜ் மற்றும் போலீசார் இன்று (30.04.2025) கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் மணியாச்சி டவர் அருகில் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கயத்தாறு பணிக்கர்குளம் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் இசக்கிமுத்து (21), நெல்லை தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் மேற்படி 2 எதிரிகளை கைது செய்தும், இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்து, அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.