
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் பகுதியில் செங்கட்டாம்பட்டியை சேர்ந்த கமல்ராஜ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கமல் ராஜ் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்படி சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்