
திண்டுக்கல், வத்தலகுண்டு வெங்கடாபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியால் வீசியதால் காயம் அடைந்ததாக மாணவன் கூறினார்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல் அம்பலமானது
மாணவன் இன்று நடைபெறும் அறிவியல் தேர்வுக்கு பயந்து தன் கை நகத்தால் கழுத்தை கீறிக் கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் போலீசார் மாணவனுக்கு அறிவுரைகளும் ஆலோசனையும் கூறினர்
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்