கோக்கு மாக்கு
Trending

TamilBlasters-க்கு புதிய படங்களை பதிவு செய்து அனுப்பிய AC மெக்கானிக் கைது

🔹டோலிவுட் சினிமாவில் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு வந்த ஜன கிரண் குமார் என்பவரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை கைது செய்துள்ளது

🔹தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை கடந்த ஜூன், 5ம் தேதி சைபர் கிரைம் காவல் துறையிடம், திரைப்படங்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்படுவது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது

🔹விசாரணையில் திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியான படங்களிலிருந்த வாட்டர் மார்க்கை கொண்டு, அவை ஹைதராபாத்தில் இருந்து எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது

🔹மேற்கொண்டு விசாரணையில், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜன கிரண் குமார் என்ற AC மெக்கானிக், ஹைதராபாத்தில் இருந்து 18 மாதங்களாக திருட்டுத்தனமாகத் தெலுங்கு திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்

🔹கிரண் குமார், தனது சட்டைப் பாக்கெட்டில் செல்போனை வைத்து, திரைப்படத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளார்

🔹இதற்கான பணத்தை பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்சியாக பெற்று பிறகு ZepPya, CoinDCX போன்றவை மூலம் இந்தியப் பணமாக மாற்றி வந்துள்ளார்

🔹திருட்டுத்தனமாகப் படங்களை வெளியிடும் 1TamilBlasters, 5MoviezRulz மற்றும் 1TamilMV போன்ற முக்கிய தளங்கள் பற்றிய தகவல் கிடைக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது

🔹இப்படி திருட்டுத்தனமாகப் படங்கள் வெளியாவதின் மூலம் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் தெலுங்கு திரைத்துறைக்கு ரூ.3,700 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button