
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சிவஞானபுரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களின் 100 நாள் வேலைக்காக கொடுக்கப்பட்ட ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி சிறு தொழில் கடன் பெற்றதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து வாங்காத கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்த சொல்வதாக எனக்கூறி வங்கிக்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நகைக்கடன் பெற்றவர்கள் நகை கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்தும் சம்மாந்தப்பட்டவர்களிடம் வங்கி நிர்வாகம் வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
இது குறித்து மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி என்பவர் சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ராஜமாணிக்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மன உளைச்சலில் இன்று ராஜமாணிக்கம் தென்னமரத்து மாத்திரையை சாப்பிட்டு தற