
நில தகராறுல சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம் சம்பவம் குடியாத்தம் அருகே அரங்கேறி இருக்கு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்டாங்குட்டை பகுதிய சேர்ந்தவர் சண்முகம் மகன் ரமேஷ். பெங்களூருல வேலை செய்து வந்த ரமேஷ்க்கும், ஆவரோட பெரியப்பாவான விநாயகத்தோட குடும்பத்துக்கும் இடையே பல நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்ததா சொல்லப்படுது. இதுக்காக ரமேஷோட குடும்பத்தாரும், விநாயகத்தின் குடும்பத்துக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை ஏற்பட்டு இருக்கு.
இந்த நிலையிலதான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கு. வழங்கம் போல அன்னிக்கு ஏற்பட்ட நிலத்தகராறுல விநாயகம் சண்டை போட்டு இருக்காரு. அப்போது ஆவேசமான விநாயகம், தனக்கு பக்கத்துல இருந்த மின்வெட்டிய எடுத்து ரமேஷோட கழுத்துல சரமாரியா வெட்டி இருக்காரு. இதுல பலத்த காயமான ரமேஷ் மயக்கமாகி கீழே விழுந்தாரு. உடனே பதறி துடிச்ச அங்கிருந்த சொந்தக்காரங்க, உயிருக்காக துடிச்சிட்டு இருந்த ரமேஷ ரத்த வெள்ளத்துல தூக்கிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஓடி இருக்காங்க.
அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்துல இருக்கற அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வச்சி இருக்காங்க. அங்கு எவ்வளவு முயற்சி செஞ்சும், ரமேஷால உயிர் பிழைக்க முடியல.
இதனால ஆத்திரமான ரமேஷோட உறவினர்கள் மண்வெட்டியால வெட்டி கொல பண்ண விநாயகம் மேல நடவடிக்கை எடுக்கலன்னு சொல்லி குடியாத்தம் போலீஸ் ஸ்டேஷன முற்றுகையிட்டு இருக்காங்க. இதுமட்டுமில்லாம குடியாத்தம் – ஆம்பூர் சாலையில மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு இருக்காங்க. உடனே அங்க வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கறதா உறுதி அளிச்சதால சாலை மறியல்ல ஈடுபட்ட எல்லாரும் கலைஞ்சி போயிருக்காங்க.
நில தகராறுக்காக சொந்த தம்பி மகனையே கொலை செஞ்ச கொடூர சம்பவம் அங்கிருந்தவங்கள கதி கலங்க வச்சி இருக்கு.