கோக்கு மாக்கு
Trending

பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது. இதில் எம்.பி.சச்சிதானந்தம் கலந்து கொண்டார்

பாதயாத்திரை மண்டபங்கள் பக்தர்கள் , நன்கொடையாளர்களின் பணத்தில் அறநிலையத்துறையால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் அரசியல் கட்சி நிகழ்ச்சியை நடத்தியது தவறு என கூறிய இந்து அமைப்புகள் அனுமதி தந்த சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியறுத்தி உள்ளன.

இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமரவிக்குமார் -: பாதயாத்திரையாக செல்லும் போது ஓய்வு எடுத்து செல்ல அவர்களின் காணிக்கை பணத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் ‘மதம்’ என்றால் ‘அபின்’ என்ற கொள்கை உடைய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கிளை அமைப்பான வாலிபர் சங்க கூட்டம் நடத்த எந்த அடிப்படையில் அறநிலைத்துறை, பழநி கோயில் தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. இதேபோல், பிற கட்சிகள் கூட்டம் நடத்திட அனுமதி வழங்குமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துவோம் என்றார்.

வி.ஹெச்.பி திருகோயில், திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார்: அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகள் பக்தர்கள் ஓய்வு எடுக்க எடுக்கும் மண்டபங்களை பயன்படுத்துவது கண்டணத்திற்குரியது என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button